பாட்டு முதல் குறிப்பு
'பருவம் கண்டு அழிந்த கிழத்திக்குத் தோழி சொல்லியது
107.
கரு உற்ற காயாக் கண மயில் என்று அஞ்சி,
உரும் உற்ற பூங் கோடல் ஓடி, உரும் உற்ற
ஐந் தலை நாகம் புரையும் அணிக் கார்தான்
எம்தலையே வந்தது, இனி.
உரை