பாட்டு முதல் குறிப்பு
'பருவம் அன்று' என்று வற்புறுத்தும் தோழிக்குத்
தலைமகள் ஆற்றாது சொல்லியது
108.
கண் உளவாயின், முலை அல்லை, காணலாம்;
எண் உளவாயின், இறவாவால்; எண் உளவா,
அன்று ஒழிய, நோய் மொழிச் சார்வு ஆகாது;-உருமுடை வான்
ஒன்று ஒழிய, நோய் செய்தவாறு.
உரை