பாட்டு முதல் குறிப்பு
பருவம் கண்டு ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது
109.
என்போல் இகுளை! இருங் கடல் மாந்திய கார்
பொன்போல் தார் கொன்றை புரிந்தன;-பொன்போல்
துணை பிரிந்து வாழ்கின்றார் தோன்றுவர்; தோன்றார்,
இணை பிரிந்து வாழ்வர், இனி.
உரை