பாட்டு முதல் குறிப்பு
பருவம் காட்டி, தோழி, தலைமகளை வற்புறுத்தியது
112.
தேரோன் மலை மறைய, தீம் குழல் வெய்து ஆக,
வாரான் விடுவானோ?-வாட்கண்ணாய்!-கார் ஆர்
குருந்தோடு முல்லை குலைத்தனகாண்; நாமும்
விருந்தோடு நிற்றல், விதி.
உரை