பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
113. பறி, ஓலை, மேலொடு கீழா, இடையர்
பிறியோலை பேர்த்து, விளியா, கதிப்ப,
நரி உளையும் யாமத்தும் தோன்றாரால்-அன்னாய்!-
விரி உளை மான் தேர் மேல் கொண்டார்.