தலைமகளைத் தோழி பருவம் காட்டி, வற்புறுத்தியது
117. கத நாகம் புற்று அடையக் கார் ஏறு சீற,
மத நாகம் மாறு முழங்க, புதல் நாகம்
பொன் பயந்த, வெள்ளி புறமாக;-பூங்கோதாய்!-
என் பசந்த, மென் தோள், இனி?