'பருவம் அன்று' என்று, வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள்
வன்புறை எதிர் அழிந்து சொல்லியது
118. கார் தோன்றிப் பூவுற்ற காந்தள் முகை, விளக்குப்
பீர் தோன்றித் தூண்டுவாள் மெல் விரல்போல்; நீர் தோன்றி,
தன் பருவம் செய்தது கானம்;-தடங் கண்ணாய்!-
‘என் பருவம் அன்று’ என்றி, என்று.