119. ‘உகவும் கார் அன்று’ என்பார், ஊரார்; அதனைத்
தகவும் தகவு அன்று என்று ஓரேன்; தகவேகொல்?
வண் துடுப்பு ஆய், பாம்பு ஆய், விரல் ஆய், வளை முரி ஆய்,
வெண் குடை ஆம்,-தண் கோடல் வீந்து.