வெறி விலக்கி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது
12. வேலனார் போக; மறி விடுக்க; வேரியும்
பாலனார்க்கு ஈக;-பழியிலாள் பாலால்
கடும் புனலின் நீந்தி, கரை வைத்தாற்கு அல்லால்,
நெடும் பணைபோல் தோள் நேராள், நின்று.