பாட்டு முதல் குறிப்பு
தோழி சேட்படுத்த இடத்து, தலைமகன் தனது
ஆற்றாமையால் சொல்லியது
16.
‘நாள் நாகம் நாறும் நனை குழலாள் நல்கி, தன்
பூண் ஆகம் நேர்வு அளவும் போகாது, பூண் ஆகம்’
என்றேன்; இரண்டாவது உண்டோ? மடல் மாமேல்,
நின்றேன், மறுகிடையே நேர்ந்து.
உரை