'நின்னால் சொல்லப்பட்டவளை அறியேனாலோ'
என்ற தோழிக்குத் தலைமகன் அறிய உரைத்தது
17. அறிகு அவளை; ஐய இடை, மடவாய்! ஆய,
சிறிது அவள் செல்லாள், இறும் என்று அஞ்சிச் சிறிது, அவள்
நல்கும்வாய் காணாது, நைந்து உருகி என் நெஞ்சம்
ஒல்கும்வாய் ஒல்கல் உறும்.