பின்னின்ற தலைமகன் தோழி குறை மறாமல் தனது
ஆற்றாமை மிகுதி சொல்லியது
19. பால் ஒத்த வெள் அருவி பாய்ந்து ஆடி, பல் பூப் பெய்-
தாலொத்த ஐவனம் காப்பாள் கண் வேல் ஒத்து, என்
நெஞ்சம் வாய்ப் புக்கு ஒழிவு காண்பானோ, காண் கொடா?
அம் சாயற்கே நோவல் யான்.