ஆற்றானாய தலைமகனைத் தோழி ஏன்றுகொண்டு கையுறை எதிர்ந்தது
21. ‘பொன் மெலியும் மேனியாள் பூஞ் சுணங்கு மென் முலைகள்
என் மெலிய வீங்கினவே, பாவம்!’ என்று, என் மெலிவிற்கு?
அண் கண்ணி வாடாமை, யான், ‘நல்ல’ என்றால், தான்
உண்கண்ணி வாடாள் உடன்று.