'நின்னால் குறிக்கப்பட்டாளை யான் அறியேன்' என்ற தோழிக்குத்
தலைமகன் கூறியது; பாங்கற்குக் கூறியதூஉம் ஆம்
23. பெரு மலை தாம் நாடி, தேன் துய்த்து, பேணாது
அரு மலை மாய்க்குமவர் தங்கை திரு முலைக்கு
நாண் அழிந்து, நல்ல நலன் அழிந்து, நைந்து உருகி,
ஏண் அழிதற்கு யாம் ஏயினம்.