தோழி படைத்து மொழி கிளவியான் வரைவு கடாயது
27. பனி வரை நீள் வேங்கைப் பய மலை நல் நாட!
‘இனி வரையாய்’ என்று எண்ணிச் சொல்வேன்; முனி வரையுள்
நின்றான் வலியாக நீ வர, யாய் கண்டாள்;
ஒன்றாள், காப்பு ஈயும், உடன்று.