தலைமகள் இற்செறிந்த காலத்து, புனத்தின்கண் வந்த தலைமகன்
தலைமகளைக் காணாது ஆற்றாது பெயர்கின்றான் சொல்லியது
4. கோடாப் புகழ் மாறன் கூடல் அனையாளை
ஆடா அடகினும் காணேன்; போர் வாடாக்
கருங் கொல் வேல் மன்னர் கலம் புக்க கொல்லோ,
மருங்குல் கொம்பு அன்னாள் மயிர்?