பாட்டு முதல் குறிப்பு
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச்
சொல்லுவாளாய், தோழி செறிப்பு அறிவுறீஇயது
5.
வினை விளையச் செல்வம் விளைவதுபோல் நீடாப்
பனை விளைவு நாம் எண்ண, பாத்தித் தினை விளைய,-
மை ஆர் தடங் கண் மயில் அன்னாய்!-தீத் தீண்டு
கையார் பிரிவித்தல் காண்!
உரை