|
சுரத்திடைச் சென்ற செவிலிக்குத் தலைமகனையும் தலைமகளையும் கண்டார் சொல்லிய வார்த்தையைத் தாங்கள் கேட்டார்க்குச் சொல்லி ஆற்றுவித்தது | |
71. | அம் சுடர் நீள் வாள் முகத்து ஆயிழையும், மாறு இலா வெஞ் சுடர் நீள் வேலானும், போதரக் கண்டு, அஞ்சி, ‘ஒரு சுடரும் இன்றி உலகு பாழாக, இரு சுடரும் போந்தன!’ என்றார். | |
|
உரை
|