|
வினை முற்றிய தலைமகன் தலைமகளை நினைந்த இடத்து, தலைமகள் வடிவு தன் முன் நின்றாற் போல வந்து தோன்ற, அவ் வடிவை நோக்கிச் சொல்லி, ஆற்றுவிக்கின்றது | |
77. | வந்தால்தான், செல்லாமோ-ஆர் இடையாய்!-வார் கதிரால், வெந்தால்போல் தோன்றும் நீள் வேய் அத்தம், தந்து ஆர் தகரக் குழல் புரள, தாழ் துகில் கை ஏந்தி, மகரக் குழை மறித்த நோக்கு? | |
|
உரை
|