தோழி தலைமகளைப் பருவம் காட்டி வற்புறுத்தியது
95. மேல் நோக்கி வெங் கதிரோன் மாந்திய நீர் கீழ் நோக்கி,
கான் ஓக்கம் கொண்டு, அழகா-காண், மடவாய்! மான் நோக்கி!-
போது ஆரி வண்டு எலாம் நெட்டெழுத்தின்மேல் புரிய,
சாதாரி நின்று அறையும், சார்ந்து.