மாலைப் பொழுது கண்டு ஆற்றாளாய தலைமகள்
தோழிக்குச் சொல்லியது
96. இருள் பரந்து ஆழியான்தன் நிறம்போல், தம்முன்
அருள் பரந்த ஆய் நிறம் போன்று, மருள் பரந்த
பால் போலும் வெண் நிலவும்,-பை அரவு அல்குலாய்!-
வேல் போலும், வீழ் துணை இலார்க்கு.