36. பிடவம் குருந்தொடு பிண்டி மலர,
மடவ மயில் கூவ மந்தி மா கூர
தட மலர்க் கோதையாய்!-தங்கார் வருவர்,
இடபம் எனக் கொண்டு, தாம்.