தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழியால் சொல் எடுப்புண்ட
தலைமகள் சொல்லியது
55. கொக்கு ஆர் கொடுங் கழிக் கூடு நீர்த் தண் சேர்ப்பன்
நக்காங்கு அசதி நனி ஆடி,-தக்க
பொரு கயற்கண்ணினாய்!-புல்லான் விடினே,
இரு கையும் நில்லா, வளை.