இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக,
தலைமகட்குச் சொல்லுவாளாய்,
தோழி படைத்து மொழிந்தது
59. தாழை குருகு ஈனும் தண்ணம் துறைவனை-
மாழை மான் நோக்கின் மடமொழி!-'நூழை
நுழையும் மட மகன் யார்கொல்?’ என்று, அன்னை
புழையும் அடைத்தாள், கதவு.