தோழி தலைவிக்குத் தலைவன் வரைவொடு புகுந்தமை சொல்லியது;
வினை முற்றி மீண்ட தலைமகன் வரவு அறியச் சொல்லியதூஉம் ஆம்.
60. பொன் அம் பசலையும் தீர்ந்தது ;- பூங்கொடி!-
தென்னவன் கொற்கைக் குருகு இரிய, மன்னரை
ஓடு புறம் கண்ட ஒண் தாரான் தேர் இதோ,
கூடல் அணைய வரவு.