13. சீலம் அறிவான் இளங்கிளை; சாலக்
குடி ஓம்ப வல்லான் அரசன்; வடு இன்றி
மாண்ட குணத்தான் தவசி;-என மூவர்
யாண்டும் பெறற்கு அரியார்.