16. மண்ணின் மேல் வான் புகழ் நட்டானும், மாசு இல் சீர்ப்
பெண்ணினுள் கற்புடையாள்-பெற்றானும், உண்ணு நீர்க்
கூவல் குறை இன்றித் தொட்டானும்,-இம் மூவர்
சாவா உடம்பு எய்தினார்.