18. ஒருதலையான் வந்துறூஉம் மூப்பும், புணர்ந்தார்க்கு
இரு தலையும் இன்னாப் பிரிவும், உருவினை
உள் உருக்கித் தின்னும் பெரும் பிணியும்,-இம் மூன்றும்
கள்வரின் அஞ்சப்படும்.