26. ஒல்வது அறியும் விருந்தினனும், ஆர் உயிரைக்
கொல்வது இடை நீக்கி வாழ்வானும், வல்லிதின்
சீலம் இனிது உடைய ஆசானும்,-இம் மூவர்
ஞாலம் எனப் படுவார்.