35. முந்நீர்த் திரையின் எழுந்து இயங்கா மேதையும்,
நுண் நூல் பெருங் கேள்வி நூல் கரை கண்டானும்,
மைந் நீர்மை இன்றி மயல் அறுப்பான்,-இம் மூவர்
மெய்ந் நீர்மைமேல் நிற்பவர்.