86. அற்புப் பெருந் தளை யாப்பு நெகிழ்ந்து ஒழிதல்,
கற்புப் பெரும் புணை காதலின் கைவிடுதல்,
நட்பின் நய நீர்மை நீங்கல்,-இவை மூன்றும்
குற்றம் தரூஉம் பகை.