9. பெருமை உடையார் இனத்தின் அகறல்,
உரிமை இல் பெண்டிரைக் காமுற்று வாழ்தல்,
விழுமிய அல்ல துணிதல்,-இம் மூன்றும்
முழுமக்கள் காதலவை.