93. இருளாய்க் கழியும் உலகமும், யாதும்
தெருளாது உரைக்கும் வெகுள்வும், பொருள் அல்ல
காதற்படுக்கும் விழைவும்,-இவை மூன்றும்
பேதைமை, வாழும் உயிர்க்கு.