158. ‘மறுமை ஒன்று உண்டோ? மனப் பட்ட எல்லாம்
பெறுமாறு செய்ம்மின்’ என்பாரே-நறு நெய்யுள்
கட்டி அடையைக் களைவித்து, கண் செரீஇ,
இட்டிகை தீற்றுபவர்.