175. வேளாண்மை செய்து, விருந்து ஓம்பி, வெஞ் சமத்து
வாள் ஆண்மையானும் வலியராய், தாளாண்மை
தாழ்க்கும் மடி கோள் இலராய்,-வருந்தாதார்
வாழ்க்கை திருந்துதல் இன்று.