189. எய்தா நகைச் சொல் எடுத்து உரைக்கப்பட்டவர்
வைதாராக் கொண்டு விடுவர்மன்; அஃதால்-
புனல் பொய்கை ஊர!-விளக்கு எலி கொண்டு
தனக்கு நோய் செய்துவிடல்.