பாட்டு முதல் குறிப்பு
281.
பொருந்தாதவரைப் பொருது அட்டக் கண்ணும்,
இருந்து அமையார் ஆகி, இறப்ப வெகுடல்,-
விரிந்து அருவி வீழ்தரும் வெற்ப!-அதுவே,
அரிந்து அரிகால் நீர்ப் படுக்குமாறு.
உரை