301. நோக்கி அறிகல்லாத் தம் உறுப்பு, கண்ணாடி
நோக்கி, அறிப; அதுவேபோல், நோக்கி,
முகன் அறிவார் முன்னம் அறிப; அதுவே,
மகன் அறிவு தந்தை அறிவு.