பாட்டு முதல் குறிப்பு
344.
‘இரப்பவர்க்கு ஈயக் குறைபடும்’ என்று எண்ணி,
கரப்பவர் கண்டறியார்கொல்லோ?-பரப்பில்
துறைத் தோணி நின்று உலாம் தூங்கு நீர்ச் சேர்ப்ப!-
இறைத்தோறும் ஊறும் கிணறு.
உரை