351. கூர் அறிவினார் வாய்க் குணமுடைச் சொல் கொள்ளாது,
கார் அறிவு கந்தா, கடியன செய்வாரைப்
பேர் அறியார் ஆயின பேதைகள் யார் உளரோ?-
ஊர் அறியா மூரியோ இல்.