356. பெரிய குடிப் பிறந்தாரும் தமக்குச்
சிறியார் இனமா ஒழுகல்-வெறி இலை
வேலொடு நேர் ஒக்கும் கண்ணாய்!-அஃது அன்றோ,
பூவொடு நார் இயைக்குமாறு.