371. ஊழாயினாரைக் களைந்திட்டு, உதவாத
கீழாயினாரைப் பெருக்குதல்,-யாழ் போலும்
தீம் சொல் மழலையாய்!-தேன் ஆர் பலாக் குறைத்து,
காஞ்சிரை நட்டுவிடல்.