பாட்டு முதல் குறிப்பு
61.
‘உணற்கு இனிய இந் நீர் பிறிதுழி இல்’ என்னும்
கிணற்று அகத்துத் தேரைபோல் ஆகார், கணக்கினை
முற்றப் பகலும் முனியாது இனிது ஓதிக்
கற்றலின், கேட்டலே நன்று.
உரை