2. கொலை புரியான், கொல்லான், புலால் மயங்கான், கூர்த்த
அலைபுரியான், வஞ்சியான், யாதும் நிலை திரியான்,
மண்ணவர்க்கும் அன்றி,-மது மலி பூங் கோதாய்!-
விண்ணவர்க்கும் மேலாய்விடும்.