35. துறந்தார், துறவாதார், துப்பு இலார், தோன்றாது
இறந்தார், ஈடு அற்றார், இனையர், சிறந்தவர்க்கும்,-
பண் ஆளும் சொல்லாய்!-பழி இல் ஊன் பாற்படுத்தான்,
மண் ஆளும், மன்னனாய் மற்று.