தொடக்கம் | ||
இளமை நிலையாமை
|
||
11. | 'நரை வரும்!' என்று எண்ணி, நல் அறிவாளர் குழவியிடத்தே துறந்தார்; புரை தீரா, மன்னா இளமை மகிழ்ந்தாரே, கோல் ஊன்றி இன்னாங்கு எழுந்திருப்பார். |
உரை |
12. | நட்புநார் அற்றன; நல்லாரும் அஃகினார்; அற்புத் தளையும் அவிழ்ந்தன; உள் காணாய்; வாழ்தலின், ஊதியம் என் உண்டாம்? வந்ததே, ஆழ் கலத்து அன்ன கலுழ்! |
உரை |
13. | சொல் தளர்ந்து, கோல் ஊன்றி, சோர்ந்த நடையினர் ஆய், பல் கழன்று, பண்டம் பழிகாறும் இல்-செறிந்து காம நெறி படரும் கண்ணினார்க்கு இல்லையே- ஏம நெறி படரும் ஆறு. |
உரை |
14. | தாழா, தளரா, தலை நடுங்கா, தண்டு ஊன்றா, வீழா இறக்கும் இவள்மாட்டும், காழ் இலா மம்மர் கொள் மாந்தர்க்கு அணங்கு ஆகும்-தன் கைக் கோல் அம்மனைக் கோல் ஆகிய ஞான்று. |
உரை |
15. | எனக்குத் தாய் ஆகியாள் என்னை ஈங்கு இட்டு, தனக்குத் தாய் நாடியே சென்றாள்; தனக்குத் தாய் ஆகியவளும் அதுஆனால், தாய்த் தாய்க்கொண்டு, ஏகும் அளித்து, இவ் உலகு. |
உரை |
16. | வெறி அயர் வெங் களத்து வேல்மகன் பாணி முறி ஆர் நறுங் கண்ணி முன்னர்த் தயங்க, மறி குளகு உண்டன்ன மன்னா மகிழ்ச்சி அறிவுடையாளர்கண் இல். |
உரை |
17. | பனி படு சோலைப் பயன் மரம் எல்லாம் கனி உதிர்ந்து வீழ்ந்தற்று, இளமை; 'நனி பெரிதும் வேல்-கண்ணள்!' என்று இவளை வெஃகன்மின்; மற்று இவளும் கோல்-கண்ணள் ஆகும், குனிந்து. |
உரை |
18. | 'பருவம் எனைத்து உள? பல்லின் பால் ஏனை? இரு சிகையும் உண்டீரோ?' என்று, வரிசையால் உள் நாட்டம் கொள்ளப்படுதலால், யாக்கைக் கோள் எண்ணார், அறிவுடையார். |
உரை |
19. | 'மற்று அறிவாம் நல் வினை; யாம் இளையம்' என்னாது, கைத்து உண்டாம் போழ்தே, கரவாது, அறம் செய்ம்மின்!- முற்றி இருந்த கனி ஒழிய, தீ வளியால் நல் காய் உதிர்தலும் உண்டு! |
உரை |
20. | ஆள் பார்த்து உழலும் அருள் இல் கூற்று உண்மையால், தோள்கோப்புக் காலத்தால் கொண்டு உய்ம்மின்; பீள் பிதுக்கிப் பிள்ளையைத் தாய் அலறக் கோடலால், மற்று அதன் கள்ளம் கடைப்பிடித்தல் நன்று. |
உரை |