தொடக்கம் | ||
அறன் வலியுறுத்தல்
|
||
31. | 'அகத்து ஆரே வாழ்வார்?' என்று அண்ணாந்து நோக்கி, புகத் தாம் பெறாஅர், புறங்கடை பற்றி, மிகத் தாம் வருந்தியிருப்பரே-மேலைத் தவத்தால் தவம் செய்யாதார். |
உரை |
32. | 'ஆவாம் நாம், ஆக்கம் நசைஇ; அறம் மறந்து, போவாம் நாம்' என்னா,-புலை நெஞ்சே!-ஓவாது நின்று உஞற்றி வாழ்தி எனினும், நின் வாழ்நாள்கள் சென்றன; செய்வது உரை. |
உரை |
33. | வினைப் பயன் வந்தக்கால், வெய்ய உயிரா, மனத்தின் அழியுமாம், பேதை; நினைத்து, அதனைத் தொல்லையது என்று உணர்வாரே தடுமாற்றத்து எல்லை இகந்து ஒருவுவார். |
உரை |
34. | அரும் பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால், பெரும் பயனும் ஆற்றவே கொள்க!-கரும்பு ஊர்ந்த சாறுபோல் சாலவும் பின் உதவி, மற்று அதன் கோதுபோல் போகும், உடம்பு! |
உரை |
35. | கரும்பு ஆட்டி, கட்டி சிறுகாலைக் கொண்டார் துரும்பு எழுந்து வேங்கால் துயர் ஆண்டு உழவார்;- வருந்தி உடம்பின் பயன் கொண்டார், கூற்றம் வருங்கால் பரிவது இலர். |
உரை |
36. | 'இன்றுகொல்? அன்றுகொல்? என்றுகொல்?' என்னாது, 'பின்றையே நின்றது கூற்றம்' என்று எண்ணி, ஒருவுமின், தீயவை; ஒல்லும் வகையால் மருவுமின், மாண்டார் அறம். |
உரை |
37. | மக்களால் ஆய பெரும் பயனும், ஆயுங்கால், எத்துணையும் ஆற்றப் பலஆனால், தொக்க உடம்பிற்கே ஒப்புரவு செய்து ஒழுகாது, உம்பர்க் கிடந்து உண்ணப் பண்ணப்படும். |
உரை |
38. | உறக்கும் துணையது ஓர் ஆலம் வித்து ஈண்டி, இறப்ப நிழல் பயந்தாஅங்கு, அறப்பயனும், தான் சிறிதுஆயினும், தக்கார் கைப் பட்டக்கால், வான் சிறிதாப் போர்த்துவிடும். |
உரை |
39. | வைகலும் வைகல் வரக்கண்டும், அஃது உணரார், வைகலும், வைகலை வைகும் என்று இன்புறுவர்- வைகலும் வைகல் தம் வாழ்நாள்மேல் வைகுதல் வைகலை வைத்து உணராதார். |
உரை |
40. | மான அருங் கலம் நீக்கி, இரவு என்னும் ஈன இளிவினால் வாழ்வேன்மன்-ஈனத்தால் ஊட்டியக் கண்ணும் உறுதி சேர்ந்து, இவ் உடம்பு நீட்டித்து நிற்கும் எனின்! |
உரை |