தொடக்கம் | ||
துறவு
|
||
51. | விளக்குப் புக இருள் மாய்ந்தாங்கு, ஒருவன் தவத்தின்முன் நில்லாதாம் பாவம்; விளக்கு நெய் தேய்விடத்துச் சென்று இருள் பாய்ந்தாங்கு, நல் வினை தீர்விடத்து நிற்குமாம், தீது. |
உரை |
52. | நிலையாமை, நோய், மூப்பு, சாக்காடு, என்று எண்ணி, தலையாயார் தம் கருமம் செய்வார்; தொலைவு இல்லாச் சத்தமும் சோதிடமும் என்று ஆங்கு இவை பிதற்றும் பித்தரின் பேதையார் இல். |
உரை |
53. | இல்லம், இளமை, எழில், வனப்பு, மீக்கூற்றம், செல்வம், வலி, என்று இவை எல்லாம், மெல்ல, நிலையாமை கண்டு, நெடியார், துறப்பர்- தலையாயார்-தாம் உய்யக் கொண்டு. |
உரை |
54. | துன்பம் பல நாள் உழந்தும், ஒரு நாளை இன்பமே காமுறுவர், ஏழையார்; இன்பம் இடை தெரிந்து, இன்னாமை நோக்கி, மனை ஆறு அடைவு ஒழிந்தார், ஆன்று அமைந்தார். |
உரை |
55. | கொன்னே கழிந்தன்று இளமையும்! இன்னே பிணியொடு மூப்பும் வருமால்;-துணிவு ஒன்றி, என்னொடு சூழாது, எழுநெஞ்சே!-போதியோ, நல் நெறி சேர, நமக்கு? |
உரை |
56. | 'மாண்ட குணத்தொடு மக்கட் பேறு இல் எனினும், பூண்டான் கழித்தற்கு அருமையால், பூண்ட மிடி என்னும் காரணத்தின், மேன்முறைக்கண்ணே கடி' என்றார், கற்று அறிந்தார். |
உரை |
57. | ஊக்கித் தாம் கொண்ட விரதங்கள் உள் உடைய, தாக்கு அருந் துன்பங்கள் தாம் தலைவந்தக்கால், நீக்கி, நிறூஉம் உரவோரே, நல் ஒழுக்கம் காக்கும் திருவத்தவர். |
உரை |
58. | தம்மை இகழ்ந்தமை தாம் பொறுப்பது அன்றி, 'மற்று எம்மை இகழ்ந்த வினைப் பயத்தான், உம்மை எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்!' என்று பரிவதூஉம், சான்றோர் கடன். |
உரை |
59. | மெய், வாய், கண், மூக்கு, செவி எனப் பேர் பெற்ற ஐ வாய வேட்கை அவாவினை, கைவாய், கலங்காமல் காத்து, உய்க்கும் ஆற்றல் உடையான் விலங்காது வீடு பெறும். |
உரை |
60. | துன்பமே மீதூரக் கண்டும், துறவு உள்ளார், இன்பமே காமுறுவர், ஏழையார்; இன்பம் இசைதொறும், மற்று அதன் இன்னாமை நோக்கி, பசைதல் பரியாதாம், மேல். |
உரை |