ஈகை
 
91. இல்லா இடத்தும், இயைந்த அளவினால்
உள்ள இடம்போல் பெரிது உவந்து, மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடை மாந்தர்க்கு
அடையாவாம், ஆண்டைக் கதவு.
உரை
   
92. முன்னரே, சாம் நாள், முனிதக்க மூப்பு, உள;
பின்னரும் பீடு அழிக்கும் நோய் உள; கொன்னே
பரவன்மின்; பற்றன்மின்; பாத்து உண்மின்; யாதும்
கரவன்மின், கைத்து உண்டாம் போழ்து.
உரை
   
93. நடுக்குற்றுத் தற் சேர்ந்தார் துன்பம் துடையார்;-
கொடுத்துத் தான் துய்ப்பினும், ஈண்டுங்கால் ஈண்டும்;
மிடுக்கு உற்றுப் பற்றினும், நில்லாது செல்வம்,
விடுக்கும் வினை உலந்தக்கால்.
உரை
   
94. இம்மி அரிசித் துணையானும், வைகலும்,
நும்மில் இயைவ கொடுத்து உண்மின்;-நும்மைக்
கொடாஅதவர் என்பர், குண்டு நீர் வையத்து
அடாஅ அடுப்பினவர்.
உரை
   
95. மறுமையும் இம்மையும் நோக்கி, ஒருவற்கு
உறுமாறு இயைவ கொடுத்தல்! வறுமையால்
ஈதல் இசையாதுஎனினும், இரவாமை
ஈதல் இரட்டி உறும்.
உரை
   
96. நடு ஊருள் வேதிகை சுற்றுக்கோள் புக்க
படு பனை அன்னர், பலர் நச்ச வாழ்வார்;
குடி கொழுத்தக்கண்ணும், கொடுத்து உண்ணா மாக்கள்
இடுகாட்டுள் ஏற்றைப் பனை.
உரை
   
97. பெயற்பால் மழை பெய்யாக்கண்ணும், உலகம்
செயற்பால செய்யாவிடினும்,-கயல் புலால்
புன்னை கடியும் பொரு கடல் தண் சேர்ப்ப!-
என்னை உலகு உய்யும் ஆறு?
உரை
   
98. ஏற்ற கை, மாற்றாமை, என்னானும் தாம் வரையாது,
ஆற்றதார்க்கு ஈவது ஆம் ஆண் கடன்; ஆற்றின்,-
மலி கடல் தண் சேர்ப்ப!-மாறு ஈவார்க்கு ஈதல்
பொலி கடன் என்னும் பெயர்த்து.
உரை
   
99. இறப்பச் சிறிது என்னாது, இல் என்னாது, என்றும்,
அறப்பயன் யார் மாட்டும் செய்க! முறைப் புதவின்
ஐயம் புகூஉம் தவசி கடிஞைபோல்,
பைய நிறைத்துவிடும்.
உரை
   
100. கடிப்பு இகு கண் முரசம் காதத்தோர் கேட்பர்;
இடித்து முழங்கியது ஓர் யோசனையோர் கேட்பர்;
அடுக்கிய மூஉலகும் கேட்குமே, சான்றோர்
கொடுத்தார் எனப்படும் சொல்.
உரை