தொடக்கம் | ||
தீவினை அச்சம்
|
||
121. | துக்கத்துள் தூங்கி, துறவின்கண் சேர்கலா மக்கட் பிணத்த, சுடுகாடு;-தொக்க விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே, புலம் கெட்ட புல்லறிவாளர் வயிறு. |
உரை |
122. | இரும்பு ஆர்க்கும் காலர் ஆய், ஏதிலார்க்கு ஆள் ஆய், கரும்பு ஆர் கழனியுள் சேர்வர்;-சுரும்பு ஆர்க்கும் காட்டுள் ஆய் வாழும் சிவலும் குறும்பூழும் கூட்டுள் ஆய்க் கொண்டு வைப்பார். |
உரை |
123. | அக்கேபோல் அங்கை ஒழிய, விரல் அழுகி, துக்கத் தொழுநோய் எழுபவே-அக் கால், அலவனைக் காதலித்துக் கால் முரித்துத் தின்ற பழவினை வந்து அடைந்தக்கால். |
உரை |
124. | நெருப்பு அழல் சேர்ந்தக்கால், நெய் போல்வதூஉம் எரிப்பச் சுட்டு, எவ்வ நோய் ஆக்கும்;-பரப்பக் கொடு வினையர் ஆகுவர், கோடாரும், கோடிக் கடு வினையர் ஆகியார்ச் சார்ந்து. |
உரை |
125. | பெரியவர் கேண்மை, பிறை போல, நாளும் வரிசை வரிசையா நந்தும்; வரிசையால், வான் ஊர் மதியம்போல் வைகலும் தேயுமே, தானே, சிறியார் தொடர்பு. |
உரை |
126. | சான்றோர் என மதித்துச் சார்ந்தாய்மன்; சார்ந்தாய்க்குச் சான்றாண்மை சார்ந்தார்கண் இல் ஆயின்; சார்ந்தோய்! கேள்: சாந்து அகத்து உண்டு என்று, செப்புத் திறந்து, ஒருவன் பாம்பு கண்டன்னது உடைத்து. |
உரை |
127. | யாஅர், ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத் தேரும் துணைமை உடையவர்?-சாரல் கன மணி நின்று இமைக்கும் நாட! கேள்:-மக்கள் மனம் வேறு; செய்கையும் வேறு. |
உரை |
128. | உள்ளத்தால் நள்ளாது, உறுதித் தொழிலர் ஆய், கள்ளத்தால் நட்டார் கழி கேண்மை-தெள்ளிப் புனற் செதும்பு நின்று அலைக்கும் பூங் குன்ற நாட!- மனத்துக்கண் மாசு ஆய்விடும். |
உரை |
129. | ஓக்கிய ஒள் வாள் தன் ஒன்னார் கைப் பட்டக்கால், ஊக்கம் அழிப்பதூஉம் மெய் ஆகும்;-ஆக்கம் இருமையும் சென்று சுடுதலால், நல்ல கருமமே, கல்லார்கண் தீர்வு. |
உரை |
130. | மனைப் பாசம் கைவிடாய்! மக்கட்கு என்று ஏங்கி, எனைத்து ஊழி வாழ்தியோ?-நெஞ்சே!-எனைத்தும் சிறு வரையே ஆயினும், செய்த நன்று அல்லால், உறு பயனோ இல்லை, உயிர்க்கு. |
உரை |